திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் செட்கோ-டான்சாஸ்க் நிறுவத்தினர் இணைந்து ரத்த தானம் முகாம்

திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் மாதம் ஒன்றிற்கு சராசரியாக சுமார் 140க்கு மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. அதுசமயம் ஏற்படும் அறுவை சிகிச்சைக்காக தேவைப்படும் ரத்தத்திற்கு ஆஸ்பத்தியில் இயங்கும் ரத்த சேகரிப்பு மையத்தில் இருந்து ரத்தம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது கொரானா ஊரடங்கினால் ரத்த கையிருப்பு குறைந்து வந்ததால் தலைமை மருத்துவர் பொன்ரவி வேண்டுகோளின் திருச்செந்தூர் பத்திரிக்கையாளர்கள் மற்றும் செட்கோ-டான்சாஸ்க் நிறுவத்தினர் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்.

முகாமினை பத்திரிக்கையாளர்கள் பாதுகாப்பு நல சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்து துவங்கி வைத்தார். செட்கோ-டான்சாஸ்க் திட்ட மேலாளர் ஆஸ்டின் முன்னிலை வகித்தார். முகாமில் திருச்செந்தூர் பத்திரிக்கையாளர்கள், தீயணைப்புதுறையினர் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். முகாமிற்கான பணியில் அரசு பொது மருத்துவர் சண்முகநாதன், செவிலியர்கள் பங்கு பெற்றனர்.