விழைவுப்பூக்கள் அறக்கட்டளை சார்பில் இரத்ததான முகாம்

கொரோனா நோய் பாதிப்பினால் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு இரத்தம் இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு அதிகஅளவு தேவைப்படுவதால், அரசின் அனுமதி பெற்று விழைவுப்பூக்கள் அறக்கட்டளை சார்பாக தலைமை மருத்துவமனையில் வைத்து இன்று காலை இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் ஜெயபால், ss மணி, பாலவிநாயகம், சிவபாலன், அருள் மகேஸ்வரன், பால்துரை, சிவகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் இணைந்து விழைவுப்பூக்கள் அறக்கட்டளை சார்பாக 31 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழங்கள், ஜூஸ் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.