தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் கோரிக்கை ஏற்று நடிகர் அஜித்குமார் அவர்களின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு அனுமதியுடன் சுந்தரவேல் புரம்- நல்லமனிதனின் (தல) ரசிகர்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனை இணைந்து, மே-1ம் தேதியான இன்று காலை அரசுமருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 50-க்கு மேற்பட்ட இளைஞர்கள் இரத்தம் வழங்கினார்கள். மேலும் 50 குடும்பங்களுக்கு அத்திவாசியப் பொருட்கள் வழங்கப்பட்டனர். இவர்களுடன் SS. மணி அவர்களும் உடன் இணைந்து முகாமிற்கு முக்கிய பங்காற்றினார்.
