தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து குருதி கொடையாளர்களுடன் இணைந்து இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம். இம்முகாமனது தூத்துக்குடி குரூஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள வளனார் கல்யாண மண்டபத்தில் காலை 09.30 – மணி முதல் மாலை 04.00 – மணி வரை நடைபெற்றது. இதில் ஐம்பதிற்கு மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டனர். கலந்த கொண்ட அனைவருக்கும் பிஸ்கட், ஜூஸ் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை முன்நிறுத்தி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அரசு மருத்துவமனைகளில் சேமிக்கப்பட்டு வைத்துள்ள இரத்தம் தேவைக்கு போதுமானதாக இல்லை என்றும் , குருதி கொடையாளர்கள் இரத்ததானம் செய்ய வர இயலாததாலும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இரத்த தேவை அதிகமாகி வருகிறது , ஆகையால் இந்த தேவையை கட்டுப்படுத்த இரத்ததான அமைப்புகளும் , குருதி கொடையாளர்களும் முன் வர வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி சுகாதார துறை ஓர் அறிக்கையின் வாயிலாக வெளியிட்டது.
இந்த அறிக்கையின் வாயிலாக பல அமைப்புகள் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்ததான முகாம்கள் நடத்தி இரத்த சேமிப்பை தேவைக்கேற்ப ஏற்படுத்தி கொடுத்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று (09-05-2020) தூத்துக்குடி மாநகரில் உள்ள குருதி கொடையாளர்களுடன் இணைந்து இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை சார்பாக ஓர் மாபெரும் இரத்ததான முகாம் தூத்துக்குடி குரூஸ்புரம் வளனார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
இம்முகாம் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட இரத்ததான கூட்டமைப்பின் தலைவர் சேக் முகமது தலைமை தாங்கினார். அன்னைதெராசா இரத்ததான அறக்கட்டளையின் அமைப்பாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். அறம் செய் நண்பர்கள் குழு தலைவர் கிறிஸ்டோபர் குருதி கொடையாளர்களை வரவேற்றார். இந்த முகாமை சூசையப்பர் கோவில் பங்கு தந்தை அருட்திரு உவர்ட்டஸ் தொடங்கி வைத்தார்கள். புதிய ஜெருசலேம் சபையின் பாஸ்டர் ஸ்டீபன் முதலில் இரத்ததானம் செய்து தொடங்கி வைத்தார்கள். இவரை தொடர்ந்து உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ் , சிவக்குமார் தொழிலதிபர் சத்யா ஜாண்சன் என பலரும் தானாக முன்வந்து இரத்ததான சேவையை தொடங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநகர டவுன் டி.எஸ்.பி பிரகாஷ் , தூத்துக்குடி சுகாதார மாநகர நல அலுவலர் டாக்டர் அருண்குமார், மாநகர கிழக்கு மண்டல சுகாதார நல அலுவலர் இராஜசேகர் , வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் அருள் , குடிமை பொருள் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் செல்வி , உதவி ஆய்வாளர் வேல்ராஜ் , போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் வி.சி.க பிரமுகர் விமல் வங்காளியார் , வழக்கறிஞர்கள் விமல் ராஜேஷ் , ஜார்ச் புஷ் , நாம் தமிழர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் அறம் செய் நண்பர்கள் குழு , ஆல்கேன் டிரஸ்ட் , அன்பு மனிதம் அறக்கட்டளை , அன்னை தெரேசா இரத்ததான அறக்கட்டளை , மக்கள் ஐக்கிய சங்கம் , இரட்சண்யா செங்குருதி இயக்கம் , அறம் அறக்கட்டளை , விளைவு பூக்கள் , இமைகள் அறக்கட்டளை , நல்ல மனிதர்கள் அஜித் குரூப் , மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி , இந்திய சிட்டிசன் அஜித் நற்பணி இயக்கம் உள்ப்பட இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை சார்ந்த குருதி கொடையாளர்கள் சுமார்.113 – நபர்கள் தயக்கமின்றி இரத்த தானம் செய்து கொண்டனர்.
இறுதியில் கலந்து கொண்ட அனைத்து குருதி கொடையாளர்களுக்கும் இரட்சண்யா செங்குருதி இயக்க தலைவர் கோகுல் நன்றி கூறிக்கொண்டார். இம்முகாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்ட சமூக இடைவெளி மற்றும் முக கவசம் போன்ற விதிமுறைகளை முழுமையாக பின்பற்றியே நடந்து முடிந்தது.