பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து – சத்துணவு பணியாளர்!

அன்னவாசல் முக்கண்ணாமலைப்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார் பாரிச பேகம். அவர் பள்ளியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தினந்தோறும் சாப்பாடு சமைத்து வழங்கும் பாரிச பேகத்திற்கு, குழந்தைகளுக்கு ஒரு நாளாவது விருந்து சாப்பாடு போடவேண்டும் என்ற ஆசையில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவருக்கும் தன்னுடைய சொந்த செலவில் மட்டன் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். இவரது இந்த செயலுக்கு அக்கிராம மக்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.