ரூ.3.5கோடி செலவில் பல்லுயிர் பூங்கா – தூத்துக்குடி


தூத்துக்குடியில் பசுமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மீன்வளக்கல்லூரிக்கு எதிரே ரூ.3.5கோடி செலவில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்தம் விரைவில் கூறப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்தார். மற்றும் தமிழக முதல்வர் வருகிற 22ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகையில் காணொளிக் காட்சி மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.15 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் பரிசோதனைக் கருவியை முதல்வர் திறந்து வைக்க இருப்பதாக தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்தார்.