செவ்வாழையில் நிறைந்துள்ள சத்துக்கள்…

செவ்வாழையில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு இது ஆரோக்கியத்தை ஏற்படுத்த உதவுகின்றது. மற்ற வாழை பழங்களை விட செவ்வாழையில் அதிகப்படியான அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளது.எனவே தினமும் ஒரு வாழை பழத்தை உண்டு வரலாம்.

நார்ச்சத்து :

இந்த பழத்தில் உடலுக்கு தேவையான கரையும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஒரு பழத்தில் 4 கிராம் அளவிற்கு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இந்த நார்ச்சத்து நிறைந்த பழத்தை தினமும் உண்டு வந்தால் உடலில் இருக்கும் அதிகமான பருமன் குறைந்துவிடும். மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை போன்ற உடல் உபாதைகள் ஏற்படாது.

சிறுநீரக கற்கள் வராமல் காக்கும் :

சிறுநீரக கற்கள், இரத்த அழுத்தம்,இருதய நோய் மற்றும் புற்று நோய் போன்று உடலில் ஏற்படும் பல விதமான நோய்களை தடுக்க பொட்டாசியம் சத்து தேவை. செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் சத்து மேற்கூறிய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. தினமும் ஒரு செவ்வாழைப்பழம் உண்டு வருவதால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும். சிறுநீரகத்தில் கற்கள் வராமல் உடலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்.

வைட்டமின் சி நிறைந்தது :

சருமம், முடி, மூட்டு மற்றும் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவையான சத்து வைட்டமின் -சி என்று சொல்லலாம். தினமும் நாம் செவ்வாழை உண்டு வருவதால் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. ஒரு செவ்வாழையில் 16% வைட்டமின் -சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும் : இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் செவ்வாழையில் உள்ளதால் நம்முடைய உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது. தினமும் ஒரு பழம் உண்டுவருவதால் ரத்த சோகை மற்றும் இரத்த குறைபாடு போன்ற பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படாமல் இருக்கும்.

சரும ஆரோக்கியம் :

செவ்வாழையில் உள்ள வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடண்ட் போன்ற சத்துக்கள் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் வைக்க உதவுகின்றது. தினமும் ஒரு செவ்வாழை பழம் உண்பதால் நம்முடைய சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

கண் பார்வை திறனை அதிகரிக்கும் :

கண்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்-ஏ சத்து செவ்வாழையில் உள்ளதால், இதை தினமும் உண்டு வரலாம் இதனால் கண் குறைபாடுகள் நீங்கி கண் பார்வை கூர்மையாக மாறும்.

உடனடி சக்தி

  • விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு உள்ளவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் என அதிகமாக உடலுக்கு வேலை தருபவர்கள் செவ்வாழை பழத்தினை உட்கொண்டு வேலையை தொடங்கினால், அவர்களின் உடல் செயல்திறன் அதிகரிக்க செய்யும்.
  • பசி நேரத்தில் ஒரு வாழைப்பழத்தை உண்டால் போதும், அது உங்களுக்கு நீண்ட நேரம் ஆற்றலை தரக்கூடியதாக இருக்கும்.

மன அழுத்தத்தினை குறைக்கும் :

செவ்வாழை பழம் நம்மை மன அழுத்தத்திலிருந்து விடுபடச்செய்கிறது. மன அழுத்தத்தை குறைக்கும் பொட்டாசியம் சத்து இதில் உள்ளதால், இந்த பழத்தை ஸ்ட்ரெஸ் ஆக இருக்கும் நேரங்களில் நீங்கள் உண்டு வரலாம்

உடல் எடையினை அதிகரிக்கும் :

  • உடல் எடை குறைவாக உள்ளவர்கள் எடையை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், தினமும் இரண்டு செவ்வாழை பழங்களை உண்டு வரலாம். இதனால் உங்கள் உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைப்பது மட்டுமில்லாமல், உடல் எடையும் அதிகரிக்கும்.

இவ்வளவு நலன்கள் இருக்கும் செவ்வாழையை தினமும் உண்டு வாருங்கள், உடல் அழகு பெறுவது மட்டுமில்லாமல் ஆரோக்கியமும் பெறும்.