தூத்துக்குடியில் கடற்கரை கைப்பந்து போட்டி (Beach Volley ball)

தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு – பாரதியார் தின மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் தருவைகுளம் கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியானது நான்கு நாட்கள் நடத்த படுகின்றன, இதில் 28ம், 29ம் தேதிகளில் மாணவிகளுக்கும் 30,31ம் தேதிகளில் மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன.

பள்ளி மாணவிகளுக்கு இடையே நடந்த கடற்கரை கைப்பந்து போட்டி

மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், சதிஷ், ரவிகாந்த் மற்றும் பல உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் தலைமையில் இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து தூய மிக்கெல் கைப்பந்து கழகத்தில் இருந்து வருகை தந்து இருக்கும் சிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்க்கும் விதமாக டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி – திருவண்ணாமலை அணிக்கு இடையான போட்டியை பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜெயபால் அவர்கள் தொடக்கி வைத்தார்.

முதல் நாள் நடந்த முடிந்த போட்டியின் முடிவுகள்

14 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடந்த கடற்கரை கைப்பந்து போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்:

1.கரூர்,
2.வேலூர்,
3.புதுக்கோட்டை,
4.நாமக்கல்.

17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடந்த கடற்கரை கைப்பந்து போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்:

1.நாமக்கல்,
2.நாகப்பட்டினம்,
3.கிருஷ்ணகிரி,

19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கு இடையே நடந்த கடற்கரை கைப்பந்து போட்டியில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்:

1.கரூர்,
2.கன்னியாகுமரி,
3.திருச்சி,
4.ஈரோடு.