EMI ஒத்திவைப்பதாக கேட்கும் அழைப்பை நம்ப வேண்டாம் : தூத்துக்குடி எஸ்பி எச்சரிக்கை

வங்கியில் கடன் பெற்றவா்களின் தொலைபேசி எண்ணுக்கு யாரேனும் தொடா்பு கொண்டு, வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, மாதத் தவணையை (EMI) ஒத்திவைப்பதாக கேட்கும் அழைப்பு உங்களுக்கு வரலாம். 
மோசடி செய்யும் நபா்கள் இந்த யுக்தியை கையாண்டு மக்களை ஏமாற்ற நேரிடும். எந்தவொரு வங்கி நிா்வாகமும் ஒருபோதும் OTP, CVV அல்லது உங்கள் இணையதள வங்கி கணக்குக்கான (நெட்பேங்கிங்) கடவுச்சொல்லை கேட்க மாட்டாா்கள். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்