மீண்டும் பால் டேம்பரிங்

மே.இ.தீவுகளின் அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் 4 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பால் டேம்பரிங் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவருக்கு இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனது விரல் நகத்தினால் பந்தின் தன்மையை மாற்றி சேதப்படுத்தியது வீடியோவில் பதிவானது. இந்தக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டார் நிகோலஸ் பூரன், இதனையடுத்து 4 டி20 போட்டிகளில் அவர் ஆட முடியாது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு டி20 போட்டிகளில் நிகோலஸ் பூரன் ஆட முடியாது.

4 போட்டிகள் தடையுடன் அவரது கணக்கில் 5 தகுதியிழப்புப் புள்ளிகள் ஏறியுள்ளது.