சாலை பராமரிப்பு குழுமத்தின் சார்பாக விழிப்புணர்வு பேரணி : தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரி

தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரியின் சாலை பராமரிப்பு குழுமத்தின் சார்பாக 02.03.20 காலை 9 மணி அளவில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியானது கல்லூரி முனைவர் அருட்சகோதரி A.S.J லூசியா ரோஸ் மற்றும் துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி C.ஷிபானா அவர்கள் முன்னிலையில் தொடங்கியது. இப்பேரணி கல்லூரியிலிருந்து திரேஸ்புரம் வரை உள்ள சாலையில் நடைபெற்றது.

பேரணியின்போது சாலை பராமரிப்பு குழுமம் மற்றும் சுயநிதி பிரிவு நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், சாலை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இப்பேரணியில் சாலை பராமரிப்பு குழுமம் மற்றும் சுயநிதி பிரிவு நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள், பொறுப்பு பேராசிரியர்கள், தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து தலைமை காவலர் திரு ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் சாலை பராமரிப்பு குழுமத்தின் பொறுப்பாளர் பேராசிரியை முனைவர் திருமதி எஸ்.திரேஸ் அம்மாள் செய்திருந்தார்.