கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் சமூக இடைவெளி பற்றி விழிப்புணர்வு – ஆரோக்கியபுரம்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரனி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆரோக்கியபுரம் கிராமப் பகுதியில் தாளமுத்துநகர் காவல்துறை ஆய்வாளர் பிரேமா ஸ்டாலின் அவர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா வைரஸ் நோயிலிருந்து நாம் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மக்களுக்கும் விழிப்புணர்வு செய்தார். மேலும் வீடுகளில் முன் நின்ற மக்களுக்கு மாஸ்க் (முகமூடி) கொடுத்தார்.

தொடர்ந்து ரேசன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்க வந்த மக்களுக்கு கொரோனா நோயிலிருந்து நாம் நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது மற்றும் சமூக இடைவெளி பற்றி விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தாளமுத்துநகர் காவல் துறை ஆய்வாளரின் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நம்ம ஊரு சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.