மாணவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு : தமிழ்நாடு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக இருந்த நிலையில், கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் இருமல், தும்மல் ஆகியவற்றின் போது கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் கைகளை தூய்மையாக வைக்கும்படியாக அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்யவேண்டும். குறிப்பாக மக்கள் கூடும் இடங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதேபோல் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.