கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்த என்ற சீன மருத்துவரின் புகைப்படத்துடன் கூடிய விழிப்புணர்வு

கொரோனா வைரஸ் முதன் முறையாக சீனாவில்தான் பரவத்தொடங்கியது. பின்னர் இந்த வைரஸ் உலகில் உள்ள பல நாடுகளுக்கு பரவ தொடங்கியது. ஆனால் இந்த முதன் முதலில் கண்டுபிடித்தது சீனாவை சேர்ந்த மருத்துவர் லீ வென்லியாங். ஆனால் இவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணடைந்துவிட்டார்.

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இந்தியா முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன்  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில், முதன் முதலில் கொரோனா வைரஸ் நோயை கண்டுபிடித்து அதன் பாதிப்பால் மரணமடைந்த என்ற சீன மருத்துவரின் புகைப்படத்துடன் கூடிய விழிப்புணர்வு ஓவியம்  வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.