காளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; கெத்து காட்டிய காவல் ஆய்வாளரின் காளை

மதுரையில் இன்று பிரசித்திபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காலை 8 மணி முதல் துவங்கி நான்கரை மணி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுமார் 700 காளைகளில் 650 காளைகள் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டன.

இதில் நடைபெற்ற எட்டாவது சுற்று புது போது புதுக்கோட்டை மாவட்டம் காவல் ஆய்வாளர் அனுராதாவின் காலை களத்தில் நின்று யாரையும் நெருங்க விடாமல் கேத்துக்காட்டியது. மேலும் இதில் பங்கேற்ற 700 வீரர்களின் 60க்கு மேற்பட்ட வீரர்களுக்கு மாடு முட்டி காயம் ஏற்பட்டுள்ளது. ஏழு சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணியளவில் நிறைவடைந்தது.

மேலும் காவல்துறையினரின் கடும் கெடுபிடி காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.