உடல் வெப்ப நிலையை கண்டறியும் “தானியங்கி தெர்மல் ஸ்கேனர்” – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவில்பட்டி சோதனை சாவடி ஆகிய இடங்களில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் பொருத்தப்பட்டு உள்ளது.

உடல் வெப்ப நிலையை கண்டறிவதற்காக இக்கருவிகள் மூலம் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்குள் நடந்து வரும் போது, தானாகவே உடல் வெப்பநிலை பதிவு செய்யப்படும். இதன் மூலம் உடல் வெப்பநிலை அதிகம் இருப்பவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவில்பட்டி சோதனை சாவடி ஆகிய இடங்களில் தானியங்கி தெர்மல் ஸ்கேனர் பொருத்தப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரவேற்பு பகுதியில் இந்த கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இக்கருவியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.