தூத்துக்குடியில் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள்

தூத்துக்குடியில் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் பணியை மகிச்சியுடன் தொடங்கினார்கள். பல்வேறு இடங்களுக்கு பயணிகளுடன் மற்றும் சாலைகளில் ஆட்டோக்கள் செல்வதை இன்று பார்க்க முடிந்தது.

தமிழ்நாட்டில் தற்போது 4ஆம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து படிப்படியாக தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று முதல் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இயங்கலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இன்று முதல் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இயங்க உள்ளன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி ஆட்டோக்கள் இயங்கலாம் என்றும் ஒரு நேரத்தில் ஒரு ஆட்டோவில் டிரைவர் தவிர்த்து மேலும் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, ரிக்‌ஷாக்கள் இயங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு கூடுதல் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு உள்ளன.

ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் முகக்க்வசம் அணிந்திருக்க வேண்டும். வாகனத்தில் கிருமிநாசினி இருக்க வேண்டும், தினமும் 3 முறை கிருமிநாசினி மூலம் வாகனம் சுத்தம் செய்யப்பட வேண்டும். பயணத்துக்கு முன்பும் பின்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.