தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம்.

கொரானா வைரஸ் தொற்று நோயின் காரணமாக இந்தியா முழுவதிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாநகரம் முழுவதிலும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வாடிக்கையாளர் மற்றும் மக்களின் வசதிக்கேற்ப மொபைல் ஏ.டி.எம். சேவையை தொடங்கப்பட்டிருந்தது. இந்த மொபைல் ஏ.டி.எம். தூத்துக்குடி மாநகர் பகுதிகளான மில்லர் புரம், அண்ணா நகர், பிரையண்ட் நகர், சிதம்பரநகர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உட்பட பல இடங்களுக்கு சென்று வருகிறது.

நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், செய்தியாளர்களிடம் கூறும் போது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். வங்கி சேவைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் மாநகராட்சி ஊழியர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்த வங்கி ஊழியர்களுடன் செயல்படும் என்றார். அதைபோல் இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளது.