தூத்துக்குடியில் கொரோனா நோயில் இருந்து ஒரே நாளில் 19 பேர் குணமடைந்தனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97ஆக அதிகரிப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே மொத்தம் 194 பேர் கெரோனா தெற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஏற்கனவே 78 பேர் நோய் தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 114 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதைத்தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த 11 ஆண்கள் 8 பெண்கள் உட்பட மொத்தம் 19 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி
தலைமையில், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

மேலும் இவர்கள் 19 பேரும் 14 நாள்கள் அவரவர் வீடுகளில் தனிமையாக இருக்கும் படி அறிவுறுத்தபட்டனர். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைவரும் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.