திருநங்கைகளுக்கு உதவிக்கரம் நீட்டும் அஸ்திரம் பவுண்டேஷன்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை புவனா பிரையன்ட நகரில் வசித்து வருகிறார். அவர் சிறு சிறு கூழி தொழில்களை செய்தும், கடைகளில் காசு வாங்கி தனது வாழ்வினை நடத்தி வந்தார். ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிற அஸ்திரம் பவுண்டேஷனை தொடர்பு கொண்டு திருநங்கைகளான எங்களுக்கும் ஏதாவது உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவர்களது கோரிக்கைகளை ஏற்று முதலில் திருநங்கை சமூகத்தினருக்கும், மற்றும் வீடுகளில் இல்லாமல் தெருக்களில் திரியும் ஏழை மக்களுக்கும் உணவு அளித்துள்ளனர். பின்பு அஸ்திரம் ஃபவுண்டேஷன் மூலம் மட்டகடையை சேர்ந்த செல்வ பாரதி என்பவரிடம் டீ தொழில் செய்வதற்காக உதவி கேட்டேன். எனது உதவியினை ஏற்று எனக்கும் மடத்தூரை சேர்ந்த திருநங்கை காஞ்சனா, மற்றும் திரேஸ்புரத்தை சேர்ந்த ரீமா என்பவருக்கும் டீ கேன் வாங்கி கொடுத்து உதவினார்.

ஊரடங்கு அமலில் உள்ளதால் பல தொழில்கள் முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு பிறகு தொழில் வளர்ச்சி அடையும் என்றும் எங்களைப்போல் திருநங்கைகளுக்கு இவ்வாறு தொழில் செய்வதால் வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வருவதற்கு சமூகத்தில் எங்களுக்கென்று ஒரு மரியாதை உருவாகும் என்று அவர் கூறினார். ஏழை மக்களுக்கு இவ்வாறு உதவி செய்யும் அஸ்தரம் பவுண்டேஷன் மற்றும் செல்வபாரதி ஆகியோருக்கு அவரது நன்றியினை தெரிவித்தார்.