ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கு உடன்குடி கிறிஸ்தியா நகரம் சபை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் உதவிகள்

கொரோனா வைரஸ் தடுப்பாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கு உடன்குடி கிறிஸ்தியா நகரம் சபை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய சேகர குரு செல்வன் மகாராஜா ஆரம்ப ஜெபம் செய்தார். தச்சுத் தொழிலாளர்கள், பெயிண்டர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என 175பேருக்கு அரிசி, காய்கனிகளை கிறிஸ்தியாநகரம் ஆலய உதவி சேகரகுரு ஆஷா தேவதாஸ் வழங்கினார்.

இதில் கனகராஜ், சாம், செல்வன், அசோகன், கண்ணன், பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.