தற்போது ஊரடங்கால் மந்தமாகிய ஆர்ட்டிஸ்ட் தொழில்

30 வருட காலமாக செய்து வந்த தொழில் தற்போது ஊரடங்கால் மந்தமாகி உள்ளது என கூறும் வரைபட கலைஞர்கள்

தங்கள் திறமையை வரைபடம் மூலம் வெளிப்படுத்தும் ஆர்ட்டிஸ்ட் இங்கு பலர். நாம் சாலையோரங்களில் செல்லும் போது சுவர்களில் வரையப்பட்ட விழிப்புணர்வு வரைபடங்கள், அரசியல் சார்ந்த விளம்பரங்கள், திருமண விளம்பரங்கள், நடிகர் வரைபடங்கள் என கண்கவரும் வரைபடங்கள் பார்த்திருப்போம். உள்ளூர், வெளியூர் என பயணம் கொண்ட தொழில் ஆக தான் இருக்கும் இந்த ஆர்ட்டிஸ்ட் தொழில். தற்போது கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை விதிக்கப்பட்டதனால் தொழிலுக்கு வெளியூர் செல்லும் பயணம் முடங்கி உள்ளது உள்ளூரிலும் தொழில் வாய்ப்பு குறைவாக உள்ளது. தற்போது நிலையில் தனியார் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் ஆர்டர் மட்டும் செய்து வருகிறோம், கொரோனாக்கு முன் இருந்த தொழிலின் வேகம் தற்போது இல்லை என்று கூறும் ஆர்ட்டிஸ்ட்.