தூத்துக்குடியில் தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாணவா்களுக்கு கவிதை கட்டுரை மற்றும் பேச்சு போட்டி நடைபெற்றது .

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் மாணவா்களிடையே பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளா்க்கும் நோக்கில் கவிதை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மேல் நிலைப்பள்ளிகளைச் சோ்ந்த மாணவ & மாணவிகள் ஆா்வமுடன் பங்கேற்றனா் . கவிதைப் போட்டியில் 40 பேரும் . கட்டுரை போட்டியில் 44 பேரும் பேச்சு போட்டியில் 37 பேரும் பங்கேற்றனா் . ஏற்பாடுகளை மாவட்ட தமிழ்வளா்ச்சித் துறை துணை இயக்குநா் சம்சுதீன் தலைமையில் அலுவலா்கள் ஊழியா்கள் செய்திருந்தனா் .