ஆர்சனிகம் ஆல்பம் 30சி மருந்து விநியோகம் – கோவில்பட்டி

கோவில்பட்டி லெனின் நகரில் கொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஹோமியோ மருந்து ஆர்சனிகம் ஆல்பம் 30சி விநியோகிக்கப்பட்டது.

ஆர்சனிகம் ஆல்பம் 30 சி எனும் ஹோமியோபதி மருந்து கரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது. இதைப் பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனை ஹோமியோபதி மருத்துவர் வடாவ்கர்பீனா கோவில்பட்டி மற்றும் எட்டயபுரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் முகாம்களில் விநியோகித்தார்.

தொடர்ந்து, நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மின்வாரிய அலுவலகம், காவல் துறை, அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள், தபால் அலுவலகம், தீயணைப்புத் துறை, பி.எஸ்.என்.எல். அலுவலகம், வங்கிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஹோமியோ மருந்து விநியோகிக்கப்பட்டு கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், இந்த மருந்தை உட்கொள்ளும் முறைகள் குறித்தும் மருத்துவர் விளக்கினார்.

இந்நிலையில், கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட லெனின் நகரில் ஆர்சனிகம் ஆல்பம் 30சி எனும் ஹோமியோ மருந்தை அப்பகுதி பொதுமக்களுக்கு விநியோகித்து, அதை உட்கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.

நிகழ்வில், ஹோமியோபதி மருத்துவர் அசோக், இந்திய கலாசார நட்புறவுக் கழக மாநிலச் செயலர் தமிழரசன், லெனின் நகர் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் பகவதியம்மை, பாலகுமார், மகேஷ், தொழிலதிபர் விக்னேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.