தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதி மக்களுக்கு ஏஆர்எஸ் ஆல்பம் 30 மாத்திரை வழங்கும் நிகழ்வு

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதி மக்களுக்கு ஏஆர்எஸ் ஆல்பம் 30 மாத்திரை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் அனைவருக்கும் மனிதநேயத்தோடு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹோமியோபதி டாக்டர் பெலிக்ஸ் அவர்கள் அறிவுரையின்படி தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியபுரம் பகுதியில் ஹோமியோபதி கெரோனா நோய் எதிா்ப்பு சக்தி மருந்தான ஏஆர்எஸ் ஆல்பம் 30 மாத்திரை ஊா் பொியவா் திரு. அந்தோணிசாமி அவர்கள் முன்னிலையில் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது.