தருவைகுளம் கிராம மக்களுக்கு ஏஆர்எஸ் ஆல்பம் 30 மாத்திரை வழங்கும் நிகழ்வு

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு துறையை சார்ந்தவர்கள் சிறப்பாக பணியாற்றி, கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் போன்றவைகளை வழங்கி வருகின்றனர்.

அதைபோல் ஹோமியோபதி கெரோனா நோய் எதிா்ப்பு சக்தி மருந்தான ஏஆர்எஸ் ஆல்பம் 30 மாத்திரை, ஹோமியோபதி டாக்டர் பெலிக்ஸ் அவர்கள் முன்னிலையில் தருவைகுளம் கிராம மக்களுக்கு வழங்குவதற்காக தருவைகுளம் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே அவர்கள் ஊரில் உள்ள அன்பியம் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்கள். இந்நிகழ்வில் ஊர் நிர்வாகிகள் மகாராஜா, அன்பு மற்றும் ஊர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர்.