இரட்டை கொலையில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை, தெற்கு பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(22). இவர் கடந்த 18.05.2020 அன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த மகாராஜன்(25) மற்றும் கருப்பசாமி(70) ஆகியோரை காளிப்பாண்டி(48) என்பவருடன் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து பசுவந்தனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகன் மற்றும் காளிப்பாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேற்படி எதிரி பாலமுருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள பசுவந்தனை காவல்நிலைய ஆய்வாளர் திரு. மணிமொழி, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி பாலமுருகன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் பசுவந்தனை காவல்நிலைய ஆய்வாளர் திரு. மணிமொழி அவர்கள் எதிரி பாலமுருகனை இன்று (27.05.2020) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தார்.