ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு – சாயர்புரம் போப் கலை கல்லூரி

சாயர்புரம் போப் கலை கல்லூரியில் இயங்கிவரும் நேசம் அருகாமை மாணவ சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் சார்பாக தத்தெடுத்துள்ள கிராமங்களை சார்ந்த ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி நாசரேத்து திருமங்களத்தின் பேராயரும் போப் கலை கல்லூரியின் செயலாளரும் ஆகிய மகாகனம் தேவசகாயம் ஐயா அவர்கள் நிகழ்ச்சியை தொடங்கி நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்ய இருக்கின்றார்கள். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வர் இம்மானுவேல் மற்றும் நேசம் இயக்குனர் பேராசிரியர் தினகரன், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெமி பிரியா செய்துள்ளனர்.