மின்தடை ஏற்படும் பகுதிகள்: பசுவந்தனை துணைமின் நிலையம்

பசுவந்தனை பகுதியில் இன்று மின்தடை -மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிப்பு

கயத்தாறு துணை மின் கோட்டத்திற்கு உள்பட்ட பசுவந்தனை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 1) மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கயத்தாறு துணை மின் கோட்டத்திற்கு உள்பட்ட பசுவந்தனை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகின்ற சொக்கலிங்கபுரம் மின் தொடர் அருகில் மற்றும் குறுக்காக காற்றாலை மின் உற்பத்தி செய்யக்கூடிய ஜெனரேட்டர், காற்றாலை மின்பாதை அமைப்பதற்கான பொருள்கள் அடங்கிய வாகனம் கடந்து செல்லவுள்ளது.
இதையடுத்து சொக்கலிங்கபுரம் மின்தொடரில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகின்ற தெற்கு கைலாசபுரம், குப்பனாபுரம், கப்பிகுளம், கீழமங்கலம், மேலமங்கலம் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 1) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.