தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் தவிர்க்க முடியாத அவசர கால பராமரிப்பு பணிகள் நாளை (27.05.2020) புதன்கிழமை நடைபெற உள்ளது. எனவே, அன்றையதினம் தூத்துக்குடியில் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1 ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, பீச்ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி. ரோடு, ஜார்ஜ் ரோடு, வி.இ. ரோடு, விவிடி மெயின் ரோடு, பால விநாயகர் கோயில் தெரு, அண்ணா நகர், டூவிபுரம், மீனாட்சிபுரம், தாமோதரநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் / விநியோகம் / நகர் / தூத்துக்குடி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.