ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசம் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

ஊரடங்கு உத்தரவையொட்டி கரோனா வைரசால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் 1/04/2020 முதல் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.1,000 வழங்குவதுடன், ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி போன்ற உணவுப்பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அறிவித்தார்.