மருத்துவப் பணியில் ஈடுபட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு : திரு.கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டு பகுதியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் பார்வையிட்டு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பாராட்டினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப , விளாத்திகுளம் சட்ட உறுப்பினர் திரு.சின்னப்பன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் (பொறுப்பு) மரு.அனிதா மற்றும் மருத்துவர்கள் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளன.

மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெறும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.