கொரானா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடும் பணியாளர்களை பாராட்டி கைத்தட்டி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரானா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி கைத்தட்டி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (22.03.20)நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்திப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் பங்கேற்று கைகளை தட்டி கொரானா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் வேண்டுகோளின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் ஊரடங்கையொட்டி காலை 7 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் பொதுமக்கள் ஊரடங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார்கள். அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அவர்கள் வீட்டுக்குள் உள்ளனர். பொதுமக்கள் அனைவரும் சரியாக மாலை 5 மணிக்கு வெளியே வந்து கொரானா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடும் சுகாதார துறையினர் உட்பட அனைத்து துறை அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் கைகளை தட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது. இன்று கடை பிடிக்கப்படும் ஊரடங்கை அடுத்த 14 நாட்களுக்குள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். சமுதாய இடைவெளியாக எடுப்பதோடு தங்களின் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்ட பொது மக்கள் கொரானா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதிருவாசகமணி, உறைவிட மருத்துவர் மரு. சைலேஷ் ஜெபமணி, தூத்துக்குடி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மரு.கிருஷ்ணலீலா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.