தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய மருத்துவ பிரிவுகளில் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த பணியை நிரப்புவது தொடர்பாக தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஓட்டப்பட்ட சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன், கல்விச்சான்றிதல் நகல், சாதிச்சான்று நகர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் உள்ளிட்டவைகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு ஒப்பந்த முறை மற்றும் தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இனசுழற்சி முறைப்படி,MBC NP 2, BC (Except Muslims) NP 3, GT NP -2, SC-NP-1, BC (Muslim) P-1 என்ற அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி, மற்றும் வயது வரம்பு அரசு விதிகளுக்கு உட்பட்டது.
வரும் 9.3.2020 முதல் 18.3.2020 பிற்பகல் 5 மணி வரைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாகும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர், மாவட்ட சித்தா மருத்துவ அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், தூத்துக்குடி.