தூத்துக்குடி மாவட்டத்தில் 60 வயது வரை கடனுதவி வழங்கப்படுகிறது – ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் டாம்கோ திட்டத்தில் கடனுதவி பெற தருதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் – தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர், சிறுபான்மையினருக்கு 60 வயது வரை கடனுதவி வழங்கி வருகிறது.

ஆண்டு வருமானம் ரூ.3,00,000/-(மூன்று இலட்சம்)-க்குள் வருமானம் பெறும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் புதியதாக தொழில் முனைவோர் மற்றும் ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்வோரும் இக்கடன் திட்டத்தில் பயன் பெற்று, வாழ்வின் தரத்தை உயர்த்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேற்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கான கல்வி கடன், தனி நபர் கடன், சுய உதவிக்குழுக்கான கடன், கறவை மாடு கடன், வாகன கடன் ஆகியவற்றை பெற விரும்புவோர் சாதிச்சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை ஓட்டுநர் உரிமம், வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் கீழ்காணும் அலுவலகங்களில் மனுச் செய்து பயன்பெறலாம்.

  1. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
    நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தூத்துக்குடி.
  2. இணை பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர்,
    109/5டி, எட்டயபுரம் ரோடு, போல்பேட்டை,தூத்துக்குடி.

3 கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், தூத்துக்குடி மண்டலம், 39, டி.டி.ஆர் நாயுடு தெரு (முதல் தளம்), தூத்துக்குடி -628 002.

4 துணை பதிவாளர் அலுவலகங்கள், தூத்துக்குடி/திருச்செந்தூர்/கோவில்பட்டி

5 தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 24 கிளைகள்.

6 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும்
வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்

7 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் எண் 1/1(1), மேயர் ராமநாதன் சாலை, எழும்பூர், சென்னை- 600 008.

8 தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்,
கலசமகால், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005.

தூத்துக்குடி மாவட்டத்தில் தருதியானவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.