தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்ப படிவம் வெளியீடு…

தமிழ் வளர்ச்சித் துறையில் 2015ஆம் ஆண்டு முதல் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 மாவட்டங்களிலிருந்து 32 பேரைத் தெரிவு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும், ரூ.25,000- பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 


தற்போது 2020ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து பெற்று விருதுக்குத் தகுதியானவர்களின் விண்ணப்பத்தினைத் தொகுத்து அனுப்புமாறு சென்னைத் தமிழ் வளர்ச்சி இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் இருந்து (www.tamilvalarchithurai.com) விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பிப்பவர்கள் தன் விவரக் குறிப்பு மற்றும் இதர விவரங்களுடன் வரும் மார்ச்சு 18ஆம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு தமது விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.