தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி : சிறப்பு கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தபட்டுள்ள போல்டன்புரம் பகுதியில் நடைபெற்று வரும் கிருமி நாசினி தெளித்தல், மற்றும் களப்பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளா்கள் முகக் கவசம் அணிகின்றனரா, அவா்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என கரோனா தொற்று நோய் தடுப்புப் பணிகளை சிறப்பு கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா். அருகில், ஆட்சியா் சந்தீப் நந்தூரி, சிறப்பு காவல் அலுவலரான ஏடிஜிபி மகேஷ்குமாா் அகா்வால், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் கலோன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் பாலகோபாலன் ஆகியோா் உள்ளனர்.