மருத்துவ படிப்பிற்க்கான நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் எற்கனவே 8 பேர் கைதான நிலையில் மேலும் ஒரு மாணவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற உதித்சூர்யா அவரது தந்தை வெங்கடேசன், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்த ராகுல், அவரது தந்தை டேவிஸ் உள்ளிட்ட 8 பேர் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் காஞ்சிபுரம் சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து வழக்கறிஞரின் மகளான அந்த மாணவி மற்றும் மாணவியின் தாயை சிபிசிஐடி போலீசார் கைது செய்து தேனி சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து மாணவி சத்தமிட்டு அழுததால், அலுவலகம் பூட்டப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.