தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரானா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம், சுப்பிரமணியபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் சென்னையில் இருந்து லாரியில் வந்த அவருக்கு கடுமையான காய்ச்சல் காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது ரத்தம், சளி மாதிரிகளை பரிசோதனை செய்ததில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 30 ஆக உயர்ந்துள்ளது. இதில் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துவிட்டார். தற்போது 3 பேர் சிகிச்சையில் உள்ளனர்.