காவல்துறையினரால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனா போன்ற மற்றொரு நோய் தொற்று!

கோவில்பட்டி கிளை சிறையில் தந்தை மகன் உயிரிழந்ததற்கு உரிய நீதி வழங்கப்படும்..! நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.! – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து..!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை மகன் இருவர் கோவில்பட்டி கிளை சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. இன்று வழக்கு விசாரணையின் போது காவல்துறையால் பொதுமக்கள் தாக்கப்படுவது கொரோனாவை போல மற்றொரு நோய் தொற்று என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

காவல்துறையினரின் மன உளைச்சல் போக்க உரிய கவுன்சிலிங் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்கினர்

தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக உரிய நீதி வழங்கப்படும். நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிட்ட வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது.

இந்நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் வழக்கின் நிலை அறிக்கையை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார்.

மேலும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உள்ள ஆவணங்கள், மருத்துவ பதிவேடுகள், சிசிடிவி காட்சிகள் அனைத்தும் பத்திரப்படுத்தி வைக்க கோவில்பட்டி நீதித்துறை நடுவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

இது போன்ற சம்பவங்களை தடுக்க ஏற்கனவே நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. சட்டத்துறை செயலாளர் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு காவல்துறையினருக்கு உரிய வழிக்காட்டுதல்கள், வழிமுறைகள் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

பின்னர் வழக்கு விசாரணையை ஜீன் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது.