மற்றொரு மருத்துவர் பலி – சீனா

பல்வேறு வழிகளிலும் அரசாங்கமும் மருத்துவக் குழுவும் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையிலும், சீனாவில் கொரோனாவால் 1116ற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். Xu Hui என்ற 51 வயதான பெண் மருத்துவர் Nanjing நகரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 18 நாட்களாக கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார். இவரின் இறப்பு எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆயினும் அவர் தொடர்ச்சியாக 18 நாட்கள் இரவு பகலாக நோயாளிகளுக்காக உழைத்தவர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.