மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி மே 22 வரை நீடிப்பு

மின் கட்டணங்களை வரும் மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்ட நிலையில் மின் கட்டணம் செலுத்த நாளை கடைசி தேதி என்பதால் பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரானா நோய்த்தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மூன்றாம் கட்ட ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டது. இருப்பின் இந்த கால கட்டத்தில் மக்கள் கூட்டமாக இருப்பது சரியானது அல்ல என்பதால் மின் கட்டணங்களை வரும் மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.  அதேசமயம் மார்ச் 23 முதல் மே 17 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ளவர்கள் மே 22 வரை அபாரதமின்றி கட்டணம் செலுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.