தொலைபேசி உரையாடல் மூலம் நாளை தேர்வு : தெற்கு ரயில்வே

கொரோனா வைரஸ் தீவிரமடைந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே கல்வி நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. மேலும் நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் தெற்கு ரயில்வே நடக்க இருக்கும் தேர்வை குறித்து அறிவிப்பு  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், லேப் – டெக்னீஷன், தூய்மை பணியாளர் தேர்வுக்காக சென்னைக்கு நேரில் வர வேண்டாம்  என்று தெரிவித்துள்ளது. நாளை தேர்வு தொலைபேசி உரையாடல் மூலமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு தொலைபேசி உரையாடல் மூலம் நாளை தேர்வு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.