தமிழகத்தில் தங்கியுள்ள, வெளி மாநில தொழிலாளர்கள், அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான கணக்கெடுப்பு பணி

தமிழகத்தில் தங்கியுள்ள, வெளி மாநில தொழிலாளர்களை, அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.

தமிழகத்திலும், வெளி மாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் குறித்த விபரம், தொழிலாளர் துறையிடம் உள்ளது. இது தவிர்த்து, கட்டுமான பணியில் ஈடுபட்டோர், ஓட்டல், கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிவோர் பற்றிய விபரம், அரசிடம் முழுமையாக இல்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்பும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. அவர்களிடம், சொந்த ஊர், மொபைல் போன் எண், ஆதார் எண் போன்ற விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. கணக்கெடுப்பு முடிந்த பின், சொந்த ஊர் செல்ல விரும்புவோரை, ரயில் மற்றும் பஸ்கள் வழியே, அவர்களின் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை, வெளி மாநிலத்தவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.