ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கம் : அரசு உத்தரவிற்காக காத்திருப்பு

இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் 3ம் இடத்தில் இருக்கும் தமிழகம் ஊரடங்கு நீட்டிப்பை சில தளர்வுகளுடன் அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு 4ஆம் கட்ட ஊரடங்கை நீட்டித்தது. அதாவது மே 17ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. தற்போது மாவட்டங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கலாம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ஜூன் 7ஆம் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு முடிந்தப்பின் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான  பண்டிகை நாட்களுக்கான கட்டண விகிதத்தில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அரசு அறிவித்த பின்னரே பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.