மக்களின் குறைகளை தீர்க்கும் அம்மா திட்ட முகாம் : தூத்துக்குடி

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்ட முகாம் 28.02.2020 (வெள்ளிக்கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. திட்டத்தில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால்; நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வட்டத்தில் மறவன்மடம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் வடவல்லநாடு கிராமத்திலும்,  திருச்செந்தூர் வட்டத்தில் புன்னக்காயல் கிராமத்திலும்,  சாத்தான்குளம் வட்டத்தில்  அரசூர் பகுதி-1 கிராமத்திலும், கோவில்பட்டி வட்டத்தில் கோவில்பட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் வட்டத்தில் மாதலாபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் வட்டத்தில் டி. தங்கம்மாள்புரம் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் வட்டத்தில்; தெற்கு வீரபாண்டியாபுரம் கிராமத்திலும்,  கயத்தார் வட்டத்தில் காளம்பட்டி கிராமத்திலும், ஏரல் வட்டத்தில்  மங்கலக்குறிச்சி கிராமத்திலும் முகாம் நடைபெறவுள்ளது. எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிதெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *