21.02.2020 அன்று அம்மா திட்ட முகாம் – தூத்துக்குடி

கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 21.02.2020 (வெள்ளிக் கிழமை) அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.  இந்த முகாம் தூத்துக்குடி வட்டத்தில் வடக்கு சிலுக்கன்பட்டி, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஆறாம் பண்ணை, திருச்செந்தூர் வட்டத்தில் கானம், சாத்தான்குளம் வட்டத்தில் நடுவக்குறிச்சி, கோவில்பட்டி வட்டத்தில் அய்யனேரி, விளாத்திகுளம் வட்டத்தில் அயன் பொம்மையாபுரம், எட்டயபுரம் வட்டத்தில் சுரைக்காய்பட்டி , ஓட்டப்பிடாரம் வட்டத்தில் முத்துராமலிங்கபுரம், கயத்தார் வட்டத்தில் வடக்கு இலந்தைகுளம், ஏரல் வட்டத்தில் பழையகாயல் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது. முகாமில் மக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு-இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர்  சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.