தெற்கு மாவட்ட அதிமுகவினர் அம்மா ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை விழாவினை கொண்டாடினர் : தூத்துக்குடி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த தினம் இன்று. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதா திருவிருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி, பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அம்மாவின் 72 வது பிறந்தநாளை கொண்டாடினர். டூவிபுரம் 7வது தெருவில் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் பி.ஏ.ஆறுமுகநயினார், மாநில அமைப்புசாரா ஒட்டுனரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல், மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை, மாநகர தெற்கு பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர வடக்கு பகுதி கழக செயலாளர் பொன்ராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் குருத்தாய் விவசாய சங்க தலைவர் சிவத்தையாபுரம் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைசெயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் வீரபாகு, மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், அருண், சொக்கலிங்கம், ரமேஷ், விஜய், ஜெயபால் காமாட்சி, அன்தொனிஅஜித், அருன்ஜெயகுமார், அண்டோ, விஜய், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, பில்லாவிக்னேஷ், சரவணபெருமாள் உட்பட பல பொது மக்களும் கலந்துகொண்டனர்.