தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் 7500க்கும் மேற்பட்ட இறந்த உடல்களை இலவசமாக அமரர் ஊர்தியில் ஏற்றி அடக்கம் செய்து உதவி வரும் மாற்றுத்திறனாளி தொழிலதிபர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அமரர் ஊர்தி இலவசமாக வழங்கி வருகிறார் மாற்றுத்திறனாளி தொழிலதிபர் இதுவரை சுமார் 7500 பேரின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உதவிகளை செய்து வரும் இவர் தொடர்ந்து இந்த சேவையை செய்துவருகிறார்
இறப்பு துயரங்களின் உச்சம் அந்த அளவுக்கு சலனப்பட வைக்கும் இறப்பு பணம் இல்லாதவர்கள் ஏற்படும்போது இறந்தவர் உடலை கூட எடுத்து செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தும் அந்த துயரத்தில் பங்கு எடுத்து அந்த உடல்களை இலவசமாக அமரர் ஊர்திகளில் ஏற்றி இறுதிச் சடங்கு முடியும் வரை உதவிகளை செய்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தொழிலதிபர் சீனிவாசன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான சீனிவாசன் இவர் கேஸ் ஏஜென்சி பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவராகவும் பணியாற்றி வருகிறார் தொழிலதிபர் அரசியல் பிரமுகர் என்ற பெயர்களை தாண்டி சமூக சேவகர் என்ற பெயரே இப்பகுதியில் விளங்கி வருகிறது இதற்கு காரணம் இவர் இலவசமாக அமரர் ஊர்தி மற்றும் இறந்த உடல்களை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டிகளை வழங்கி வருவதுதான்.
தூத்துக்குடி மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ளது எட்டையபுரம் இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் பலியாகி உள்ளனர் ஆரம்ப காலங்களில் இதுபோன்ற விபத்துகளில் பலியானவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல அரசு ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஆகியுள்ளது அப்போது சீனிவாசன் நடத்திவரும் கேஸ் ஏஜென்சியின் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் இந்த உடல்களை ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்று வந்துள்ளார் இதுவே இதன் துவக்கமாக இருந்துள்ளது இதுபோல் எட்டையபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் பலர் வேலை நிமித்தமாக நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்து சென்ற காரணத்தால் கிராமப்புறங்களில் இருந்து போகக்கூடிய அவர்களின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஆட்கள் இல்லாத நிலையும் இருந்துள்ளது இதைக்கண்ட சீனிவாசன் இந்த கிராம மக்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 2 அமரர் ஊர்தி வாகனங்களை ஏற்பாடு செய்து இதன்மூலம் இந்த பகுதிகளில் யார் இறந்தாலும் அவர்களின் வீடுகளுக்கு சென்று அந்த உடல்களை அடக்கம் செய்யும் வரை உரிய உதவிகளை அமரர் ஊர்தி மூலம் செய்யப்பட்டு வருகிறது மேலும் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனப் பெட்டியும் இலவசமாக வழங்கி வருகிறார் எட்டயபுரம் மற்றும் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இவரது பணி என்பது கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு விளம்பரமும் இன்றி அமைதியாக இந்த சேவைநடைபெற்று வருகிறது.
இதுவரை சுமார் 7500 இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு இவரின் அமரர் ஊர்தி உதவியுள்ளது அதுமட்டுமின்றி எங்கு விபத்து நடந்தாலும் அந்த விபத்து நடந்த இடத்திற்கே சென்று அந்த உடல்களை எடுத்து மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வது வரை இவரது பணி தொடர்ந்த வண்ணம் உள்ளது சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெறும் அதிக அளவிலான நபர்கள் இறந்துவிட்டால்இந்த உடல்களை எடுத்துச் செல்ல நேரங்கள் குறிக்கப்பட்டு அந்த நேரத்தில் அனைத்து உடல்களும் அடக்கம் செய்வதற்கு தொடர்ச்சியான உதவிகளை செய்துவருகிறது இவரின் அமரர் ஊர்திகள் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த பகுதிகளில் எத்தனை பேர் இறந்துள்ளனர் அவர்களுக்கு எந்த நேரத்தில் உதவிகள் செய்யப் பட்டுள்ளது என்ற விபரத்தையும் பதிவேடு மூலமாக பதிவு செய்து பராமரித்து வருகிறார்
இறந்தவர்களின் உடல்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அடக்கம் செய்வதற்கு உதவி செய்வது சிலரே அதிலும் தான் ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் இது போன்ற சேவைகள் செய்வது மூலம் உயர்ந்து நிற்கிறார் இந்த மாமனிதன் சீனிவாசன்.