காய்கறிகளின் விலை மும்மடங்கு உயர்வு : தூத்துக்குடி

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எனவே இன்று மாலை 6 மணி முதல் 144 தடையுத்தரவு அமலுக்கு வருவதால் நேற்று இரவு முதல் தூத்துக்குடி மார்க்கெட்டில் அத்தியாவசிய காய்கறிகள் வாங்க மக்கள் குவிந்தனர். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டு அனைத்து காய்கறிகளின் விலையும் மும்மடங்கு உயர்ந்தியுள்ளனர். பாளை ரோட்டிலுள்ள தனியார் மார்க்கெட்டில் நேற்று காலை ரூ.20க்கு விற்ற ஒரு கிலோ கத்திரிக்காய், இன்று ரூ. 80க்கும், ரூ.40க்கு விற்ற ஒரு கிலோ கேரட் இன்று ரூ. 100க்கும், ரூ. 45க்கு விற்ற வெங்காயம் இன்று ரூ. 120க்கும், ரூ. 10க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி ரூ.50 க்கும் விற்கப்படுகிறது. விலை உயர்வால் மார்க்கெட் வந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.